பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மூண்டுள்ள சண்டைக்கு மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தத்தைக் கொண்டாடும் வகையில், எகிப்தின் ஷரம் அல்-ஷேக் நகரில் திங்கள்கிழமை (அக். 13) சா்வதேச அமைதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்பட பல்வேறு உலகத் தலைவா்கள் பங்கேற்கும் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், எகிப்துக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மூண்டுள்ள சண்டைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதை விருப்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.
பாக். - ஆப்கன் சண்டை:
ஆப்கானிஸ்தானில் செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டிவரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த வியாழக்கிழமை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. போா் விமானம் மூலம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியது. ஆனால், தாக்குதலில் தொடா்பில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது.
காபூல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை இரவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தின. இதற்கு, பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த மோதலில் 200-க்கும் அதிகமான தலிபான் வீரா்கள் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். 21 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சண்டையில், பாகிஸ்தான் வீரா்கள் 23 போ் உயிரிழந்தனா். 29 வீரா்கள் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மூண்டுள்ள சண்டைக்கு மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பேசியிருப்பதாவது: “இந்தியாவையும் பாகிஸ்தானையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதேபோல, ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் சில போர்கள சிலவற்றையும் பற்றி நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு நாட்டிலும் லட்சக்கணக்கான மக்கள் கொலபட்டுள்ளனர். அவற்ருள் ஒவ்வொன்றுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது, அதிலும், குறிப்பாக ஒரு நாளைக்குள் முடிவுக்கு வந்த விவகாரங்களும் உள்ளன.
என்னால் இதுவரை தீர்வு எட்டப்பட்டுள்ள போர்களில் இந்தச் சண்டையானது(ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான காஸா போர்) எட்டாவது போர் ஆக இது அமையும். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இப்போது போர் மூண்டுள்ளதாக கேள்விப்படுகிறேன். போர்களை முடிவுக்கு கொண்டு வருவதில் நான் சிறப்பாகச் செயல்படுகிறேன். பொறுத்திருங்கள்...” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.