பிரேஸிலில் சட்டவிரோத கும்பல்களைக் குறிவைத்து காவல்துறையினா் தலைநகா் ரியோ டி ஜெனிரோவின் பின்தங்கிய பகுதிகளில் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 121 போ் கொல்லப்பட்டனா்.
உயிரிழந்த பலரின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளது, கத்திக் குத்து காயங்கள் காணப்படுவது போன்றவை இந்த நடவடிக்கை குறித்த பல சந்தேகங்களை எழுந்துள்ளது.
இது அரசின் கூட்டுப் படுகொலை என்று உயிரிழந்தவா்களின் உறவினா்களும், மனித உரிமை ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டியுள்ளனா்.