டொனால்ட் டிரம்ப் AP (கோப்புப் படம்)
உலகம்

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

இந்தியாவுடனான வணிக உறவு குறித்து அமெரிக்க அதிபர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், இதனால், இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது,

''வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவிடம் அதிக வரி வசூலிக்கிறது இந்தியா. பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கான வரியை இந்தியா குறைத்திருக்க வேண்டும்.

அமெரிக்காவிடம் அதிக பொருள்களை விற்கிறது இந்தியா. ஆனால், எங்களிடமிருந்து குறைவாகவே வாங்குகிறது. அதாவது, இந்தியாவுடன் குறைந்த அளவே நாங்கள் வணிகம் செய்கிறோம்.

இப்போது வரை ஒருதலைபட்சமான வணிக உறவே நீடித்து வருகிறது. பல ஆண்டுகளாகவும் இது தொடர்கிறது.

இதற்கு காரணம், இப்போது வரை இந்தியா எங்களிடம் அதிக வரியை வசூலிக்கிறது. இதனால், எங்கள் பொருள்களை இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை. இது முழுவதும் ஒருதலைபட்சமான பேரழிவு'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தியா - ரஷியா இடையிலான வணிக உறவைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள டிரம்ப்,

''தேவையான கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தயாரிப்புகளை ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. குறைந்த அளவே அமெரிக்காவிடமிருந்து பெறுகிறது. தற்போது அமெரிக்காவின் மீதான வரியைக் குறைக்க இந்தியா முன்வருகிறது. ஆனால், இது மிகவும் தாமதம். இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மக்கள் சிந்தனைக்கு சில எளியை உண்மைகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இறக்குமதி வரி குறித்து டிரம்ப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பிராமணர்களா, பெரும் பணக்காரர்களா? யாரைச் சொன்னார் நவரோ?

India has charged high tariffs totally one sided disaster says donald trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன் சிரிப்பு... பூனம் பாஜ்வா!

பிடித்தமான சட்டை... மோனாமி கோஷ்!

இந்தியாவின் எரிபொருள் வழங்குநராக ரஷியா எப்போதும் விளங்கும்: அதிபர் புதின்

நெல்லையில் 6 அல்வா கடைகளுக்கு சீல்! 1 டன் தரமற்ற அல்வா பறிமுதல்!

இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மிகுந்த சவாலாக இருக்கும்: தென்னாப்பிரிக்க வீரர்

SCROLL FOR NEXT