வன்முறையில் பலியான காவல் அதிகாரியின் உடலுக்கு அஞ்சலி AP
உலகம்

நேபாள வன்முறையில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!

நேபாள வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் நேபாள ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு எதிராக இளைஞா்கள் (Gen Z) நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறையில் 72 பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலியானவர்களை தியாகிகளாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.

மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியாக 10 லட்சம் நேபாள ரூபாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பொது மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதுவரையில் பலியானோர் குறித்த தகவலின்படி, போராட்டக்காரர்கள் 59 பேர், தப்பியோட முயன்ற கைதிகள் 10 பேர், போலீஸ் அதிகாரிகள் 3 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டக்காரர்கள் 134 பேர், போலீஸ் அதிகாரிகள் 57 பேர் என மொத்தம் 191 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!

Nepal Gen-Z protest victims' families to get financial help

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: நிர்மலா சீதாராமன்

ஆசிய கோப்பை: பாக். எதிராக இந்தியா முதலில் பந்துவீச்சு!

இந்த வாரம் கலாரசிகன் - 14-09-2025

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மீனாக்ஷி ஹூடாவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT