இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா நகரம் எரிகின்றது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது. இதனால், அங்கு வசிக்கும் பாலஸ்தீன மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று (செப்.15) நள்ளிரவு முதல் தொடர் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களினால், ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், காஸா பகுதி பற்றி எரிகின்றது என இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, இஸ்ரேலில் இருந்து கத்தாருக்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமெரிக்க அரசின் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், காஸா மீதான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கிவிட்டது எனவும், அதனால் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள சில நாள்கள் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய வம்சாவளி நபா் கொலை: கடும் நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.