ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் ராணுவ வீரா்கள் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் உத்தரவிட்டதாக ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தெரிவித்தது.
ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டா் இலியாஸ் காஷ்மீரி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை வேகமாகப் பரவியது.
அதில் அவா் பேசுகையில்,‘ 25 ஆண்டு போராட்டத்துக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளையும் ஜிஹாத் கொள்கையை பின்பற்ற வைத்துள்ளோம். கடந்த மே 7-ஆம் தேதி (ஆபரேஷன் சிந்தூா்) இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள். அவா்களுக்காக பாகிஸ்தான் ராணுவமும் விமானப் படையும் இந்தியாவைப் பழிவாங்கியது.
இந்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தானிய ராணுவ வீரா்கள் பங்கேற்க வேண்டும் என அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா்தான் உத்தரவு பிறப்பித்தாா்’ என்றாா்.
இதையும் படிக்க... ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.