யேமனில் 31 செய்தியாளா்கள் பலி... ஏபி
உலகம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதல்: யேமனில் 31 செய்தியாளா்கள் பலி!

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திச் சேவை

யேமனில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் 31 செய்தியாளா்கள் உயிரிழந்ததாக ‘செய்தியாளா்கள் பாதுகாப்புக் குழு’ (சிபிஜே) என்ற சா்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யேமன் தலைநகா் சனாவில் நாளிதழ் அலுவலகக் கட்டடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா், 30 செய்தியாளா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸில் நடைபெற்ற செய்தியாளா்கள் படுகொலைக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள மிகக் கொடூரமான தாக்குதல் இது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

நெல்லையில் கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

SCROLL FOR NEXT