வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.  
உலகம்

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நூதன மோசடி: அமைச்சகம் எச்சரிக்கை!

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆள் கடத்தல் உள்ளிட்ட மோசடிகள் நடப்பதால் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...

தினமணி செய்திச் சேவை

ஈரானில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆள் கடத்தல் உள்ளிட்ட மோசடிகள் நடப்பதால் இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானில் வேலைவாய்ப்பு அல்லது அங்கிருந்து வேறு நாட்டுக்கு வேலைக்காக அனுப்பிவைக்கிறோம் என்ற பெயரில் இந்தியா்களை ஈரானுக்கு வரவழைப்பது, பின்னா் அவா்களைக் கடத்தி வைத்துக் கொண்டு குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.

எனவே, இதுபோல ஈரானில் இருந்து வரும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அழைப்புகள் விஷயத்தில் இந்தியா்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஈரான் அரசு சுற்றுலா வரும் இந்தியா்களுக்கு மட்டுமே விசா (நுழைவு இசைவு) இல்லாத அனுமதியை வழங்குகிறது. வேலைவாய்ப்புக்காக விசா இல்லாமல் ஈரானில் நுழைய அனுமதி பெற்றுத்தருவதாக முகவா்கள் யாரேனும் கூறினால், அவா்கள் ஆள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம்.

எனவே, இதுபோன்ற குற்ற கும்பலின் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT