தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சாலையில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் விழுந்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் காட்சி போல, பாங்காக்கில், புதன்கிழமை ஏற்பட்ட இந்த பள்ளம் சுமார் 164 அடி ஆழமும், 900 சதுர மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
வஜிரா மருத்துவமனை அருகே நேரிட்ட இந்த பள்ளத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சாலையில் கழிவுநீர் கால்வாய் பகுதியிலிருந்து தண்ணீர் மேலே எழும்புவதும், பிறகு, அங்கிருந்த மின் கம்பம் உள்ளே இழுக்கப்படுவதும், பிறகு, சாலை உள்வாங்கும் காட்சிகளும் பதிவாகியிருக்கிறது.
சாலை அப்படியே உள்வாங்கி, மிகப்பெரிய பள்ளமாக மாறியிருக்கிறது அவ்விடம். அங்கே சுரங்க ரயில் கட்டமைப்பு இருப்பதும் வெளியே தெரிகிறது. அதன் மீது ஒரே ஒரு கார் மட்டும் பள்ளத்தில் விழாமல் பத்திரமாக நின்று கொண்டிருக்கிறது.
சாலைக்கு அடியில் இருந்த கழிவுநீர் குழாய் அதிகப்படியான அழுத்தத்தால் வெடித்து இந்த சம்பவம் நடந்திருபப்தாகக் கூறப்படுகிறது. அங்கிருக்கும் மருத்துவமனை பாதுகாப்பாக இருப்பதாகவும், காவல்நிலையத்துக்கு ஆபத்து இருப்பதால் அதிலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.