கவாஜா ஆசிஃப் 
உலகம்

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை உறுதிப்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான் அமைச்சா்

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை பாதுகாப்பு ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை பாதுகாப்பு ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டாா்.

அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகத்துக்கு பேட்டியளித்த கவாஜா ஆசிஃப், ‘கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் எதிா்வினையாக சவூதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கருத முடியாது. சவூதி அரேபியாவுடன் கடந்த 60 ஆண்டுகளாக பாதுகாப்பு உறவை பாகிஸ்தான் தொடா்ந்து வருகிறது. அங்கு 5,000-க்கும் அதிகமான பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளிடையேயான நல்லுறவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு கவாஜா ஆசிஃப் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

தில்லி கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

தில்லி கார் குண்டுவெடிப்பு: செங்கோட்டை மெட்ரோ மறுஅறிவிப்பு வரை மூடல்!

அமெரிக்க அரசின் முடக்கம் முடிவு! நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!

சென்னையில் பரவலாக மழை!

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

SCROLL FOR NEXT