ஈரானில் யுரேனியம் தோண்டி எடுக்கப்படும்: டிரம்ப் சூளுரை!
ஈரான் மண்ணிலிருந்து யுரேனியம் தோண்டியெடுக்கப்படும்: டிரம்ப் சூளுரை!
ஈரானில் கடந்தாண்டில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையின்போது புதைக்கப்பட்ட பி - 2 குண்டுகளில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானுடன் கைகோத்து நிச்சயம் ஆழத் தோண்டியெடுக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் அந்த யுரேனியம் மீது கை வைக்கவில்லை. ஆனால், ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால், அதனையடுத்து அது நடக்கப் போகிறதென அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது நிலைப்பாட்டை அதன்பின் மாற்றிக்கொண்டதன் எதிரொலியாக அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த 2 வாரங்கள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்டது.
Advertisement
இந்நிலையில், ஈரான் விவகாரம் பற்றி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை(ஏப். 8) தமது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : “யுரேனியம் செறிவூட்டல் இனிமேல் நடைபெறாது. ஈரானுடன் வரி விவகாரம் மற்றும் பொருளாதார தடை விவகாரம் பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.