சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு!
டொனால்ட் டிரம்ப் - ஷி ஜின்பிங் சந்திப்பு பற்றி...
சீனாவுக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
ரஷியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் சீனாவுக்கு வருகை தந்தபோது அந்நாட்டின் அமைச்சர்களே நேரில் வரவேற்றனர். ஆனால், நேற்று பெய்ஜிங் வந்திறங்கிய டிரம்ப்பை விமான நிலையத்துக்குச் சென்று சீன துணை அதிபா் ஹான் ஜெங்கே வரவேற்றார்.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் மாளிகைக்கு இன்று காலை வருகை தந்த டிரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் தலைமையில் இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக ஒப்பந்தம், ஈரான் போா் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இப்பயணத்தில் டிரம்ப்புடன் அவரின் மகன் எரிக், மருமகள் லாரா, டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
US President Donald Trump Meets China President Xi Jinping in Beijing!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.