சீனா சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா நாட்டுக்குச் சென்றுள்ளது குறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (மே 13) மாலை சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றடைந்தார். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்தப் பயணத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச அரசியலில் எதிராளிகளாக அறியப்படும் அமெரிக்க மற்றும் சீன அதிபர்களின் சந்திப்பில் ஈரான் போர், வர்த்தகம் மற்றும் தைவான் நாட்டுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பெய்ஜிங் சென்றடைந்த அதிபர் டிரம்ப்பை சீன துணை அதிபர் ஹான் ஸெங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். மேலும், சுமார் 300 சீன இளைஞர்கள் மற்றும் ராணுவத்தினரால் அதிபர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்தப் பயணத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முக்கிய அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
US President Donald Trump has traveled to China on a state visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.