எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் - ரஷியா இடையே எரிபொருள் தொடர்பான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது குறித்து...
உக்ரைன் - ரஷியா இடையே எரிபொருள் தொடர்பான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரும் எரிபொருள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், இதனை இரு நாடுகளும் மீற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம், இரு நாடுகளின் எரிபொருள் தயாரிப்பு நிலையங்கள், கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது. எனினும், ரஷியா அல்லது உக்ரைன் என எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் ஆற்றல் போர்நிறுத்தம் (Energy Ceasefire) அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதை மீற வேண்டாம்! இக்கருத்தில் இருதரப்பும் கவனம் செலுத்தியமைக்கு நன்றி. அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரஷியாவிடமிருந்து அமெரிக்காவுக்கும், சா்வதேச சந்தைக்கும் உடனடியாக டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
அதிபா் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். ஏனெனில், ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் போரை தொடர்ந்து நடத்த அந்நாட்டுக்கு மறைமுகமாக நிதி உதவி அளிப்பதைப்போன்று ஆகும் என உக்ரைன் விமர்சித்து வருகிறது.
an ENERGY CEASEFIRE in the War between Russia and Ukraine US President Donald Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.