FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது மிகவும் சாத்தியமற்றது: டொனால்ட் டிரம்ப்

ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது...

டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
பகிர்:

ஈரான் உடன் தொடர்ந்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து வாஷிங்டன் ஒரு வலுவான உடன்பாட்டை நாடுவதாகவும், ஈரான் முக்கியமான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அல்லது பேச்சுவார்த்தைகளில் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டால் மீண்டும் போர் தெடுக்க வேண்டியதற்கான அவசியம் இருக்காது என டிரம்ப் கூறினார்.

இருப்பினும், டிரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கை எடுப்பதை நிராகரிக்கவில்லை. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்கே கடற்படை கண்ணிவெடிகளில் மோதிய பின்னர் ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

அனைத்து அச்சுறுத்தல்களும் அகற்றப்படும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது.

மறுபுறம், ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை மீறியதாகக் கூறப்படும் ஒரு வர்த்தகக் கப்பலை ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

US President Donald Trump has said renewed military strikes on Iran are highly unlikely if ongoing negotiations make progress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.