முகப்பு
உலகம்

மீண்டும் இடதுசாரி - வலதுசாரி மோதலுக்கு வித்திட்ட அமெரிக்கா! ரஷியா, ஈரான் கண்டனம்!

வெனிசுவேலா அதிபர் மதுரோவை கைது செய்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷியா, ஈரான் கண்டனம்

Updated On : 3 ஜனவரி, 2026 at 4:56 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின்
பகிர்:

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடுகடத்தியுள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரோ சிறைப்பிடிப்பில் அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு செயலைக் கண்டித்த ரஷியா, அமைதியைக் கடைபிடிக்குமாறு கோரியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு கொள்கைரீதியான விரோதம் மேலோங்கியுள்ளது.

Advertisement

மீண்டும் இடதுசாரி - வலதுசாரி மோதலுக்கு அமெரிக்காவின் தாக்குதல் வித்திட்டுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

தொடர்ந்து, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து ஈரான் கூறியதாவது, "வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல், நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதையும் வன்மையாக ஈரான் கண்டிக்கிறது. இது ஐ.நா. அவை சாசனத்தின் மீதான கடுமையான மீறல்.

ஐ.நா. அவையில் உறுப்பினராக உள்ள ஒரு சுதந்திர அரசுக்கு எதிரான அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பின் அப்பட்டமான மீறல். இதன் விளைவுகள் முழு சர்வதேச அமைப்பினையும் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளனர்.

summary

Russia and Iran Condemns US Military Strikes Against Venezuela

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.