இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம், தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததால், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுலவேசி ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் மலைப்பாங்கான பகுதியை ஏடிஆர் 42-500 விமானம் நெருங்கும்போது, இன்று (ஜன. 17) மதியம் 1.17 மணியளவில் தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் கடல்சார் விவகாரம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
விமானத்தைத் தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தரைப் பிரிவுகளின் ஆதரவுடன் பல தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, புலுசரௌங் மலை அருகே விமானப் பாகங்கள் சிதறிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.