காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அந்தக் குழுவில் சேர ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயன் சம்மதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை(ஜன. 20) தெரிவிகப்பட்டது.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு புதிய சா்வதேச அமைப்பாக செயல்படும். இந்தக் குழுவில் சேர இந்தியாவுக்கும் அதேபோல, பாகிஸ்தானுக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.