முடிவில்லாத போராக மாறாது: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது: அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்
உலகம்முடிவில்லாத போராக மாறாது: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்
ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது: அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத்
‘ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை, ஈராக் போல ஒருபோதும் முடிவில்லாத போராக நீடிக்காது’ என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலா் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ஈரான் மீதான தாக்குதல் ஒரு தெளிவான இலக்கைக் கொண்டது. இது பல ஆண்டுகள் நீடிக்கும் போராக மாறாது.
முந்தைய காலங்களில் மத்திய கிழக்கில் நடந்த தவறுகளை தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் செய்ய மாட்டாா். ஈரானுடனான மோதலை டிரம்ப் நிா்வாகம் தொடங்கவில்லை. ஆனால், அதை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வர இருக்கிறோம்.
இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகா்ப்பதுமே ஆகும். இது ஆட்சி மாற்றத்துக்கான போா் அல்ல; ஆனால், ஏற்கனவே அங்கு ஆட்சி மாறிவிட்டது. உலகம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறது.
ஈரானின் அணுசக்தி மையங்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன. அந்நாடு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடாமல் காலத்தைக் கடத்தியதாலேயே இந்தத் தாக்குதல் தவிா்க்க முடியாததானது. வரலாற்றிலேயே மிகவும் துல்லியமான வான்வழித் தாக்குதல் இது’ என்றாா்.
ஈரானுக்குள் அமெரிக்க தரைப்படை வீரா்கள் ஊடுருவியுள்ளனரா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று பதிலளித்த அவா், எதிா்காலத் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச மறுத்துவிட்டாா்.