விருச்சிகம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

விருச்சிகம் (SCORPIO)

இது ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி; ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். இதனுடைய சின்னம் H. இது பிறப்பு உறுப்புகளைக் குறிக்கிறது. இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால் மிக்க சுறுசுறுப்பு உடையவராகவும், எதையும் நேருக்கு நேர் பேசும் குணம் கொண்டவராகவும் இருப்பர். எந்தத் தடங்கல் வந்தபோதும், எடுத்த காரியத்தை முடிக்கும் குணம் கொண்டவராக இருப்பர். இந்த ராசிக்கு 6-ம் ராசி மேஷம். அதனால், மேஷத்தில் உள்ள கிரகங்கள் உடல் நலத்தைக் கொடுக்கக்கூடும். செவ்வாயே 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதியாவதால், செவ்வாயே உடல் நலத்தைப் பாதிக்கக்கூடும்.

டிசம்பர் 2

இன்று திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும் படி சிறப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
 

டிசம்பர் 1 - 7

 

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானத்தில் திருப்தியான சூழல் நிலவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணிநுட்பங்களை அறிவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளால் பொறுப்பு அதிகரிக்கும். விவசாயிகள் பிறர் மத்தியில் பெருமை அடைவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

பெண்கள் பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

 

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில்  சூர்யன், செவ்வாய் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் சனி -  பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ  - ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு (வ) -  லாப  ஸ்தானத்தில் கேது -  அயன சயன போக  ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்

பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

விசாகம்:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள்.

அனுஷம்:

இந்த மாதம் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.

கேட்டை:

இந்த மாதம் சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2023

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை  கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்கு மாதலால் சமாதானமுறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.

வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமற் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.

அரசியல்வாதிகள் பாராட்டுப் பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியான உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பலவிதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள்.

கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இட முண்டு. குறுக்குவழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள்.

மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரம் ஆதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன்விரோதம் காரணமாக இருந்துவந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். கொடுக்கல் - வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக் கறை செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும்போது கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம்:

இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும் கலந்தவாறு இருந்துவரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம் தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும். தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெறமுயலுங்கள்.அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் அவப் பெயரிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட இடமில்லை.

கேட்டை:

இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாகச் சில சங்கடங்கள் இருக்கும். பெரிய மனதோடும் தெய்வபக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும். மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றாலும் ஒருவிதமான பீதி இருந்து வரும். சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம்தேவை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.