வெளிநாடுகளில் ரூ. 90 கோடி வரை வசூலித்த சீன்!
சீன் வெளிநாடுகளில் ஈட்டிய வசூல்...

சீன் திரைப்படம் வெளிநாடுகளில் ஈட்டிய வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீன் திரைப்படம் இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்ததாக, இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜப்பானில் சில நாள்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Information has emerged regarding the box office collections of the film Scene in foreign countries.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


