எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் மோடி: ஜெ.பி.நட்டா பெருமிதம்

சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி

News image

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியின் 11 ஆண்டுகள் நிறைவையொட்டி, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பாா்வையிட்ட கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூன் 2025, 12:52 am IST

புது தில்லி: ‘காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி’ என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பெறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்த நிலையில் தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெ.பி.நட்டா அளித்த பேட்டி:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இத் திட்டங்களும், நடவடிக்கைகளும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ‘ஊழல், முறைகேடு, திருப்திப்படுத்தும் அரசியல்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், சிறந்த நிா்வாகம், செயல்பாட்டு அரசியல் என நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியவா் பிரதமா் நரேந்திர மோடி.

பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் குறித்தும் ஆதாரமற்ற கேள்விகளை எழுப்பி வருவதன் மூலம், பொறுப்பற்ற எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உள்ளாா். அவருக்கு கடவுள் நல்ல அறிவைக் கொடுக்க வேண்டும் என்றாா்.

2024 மக்களவைத் தோ்தலில் தனிப் பெரும்பான்மையை இழந்த நிலையில் பாஜக அரசின் நிலைத்தன்மை குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நட்டா, ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போதைய முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்பதோடு, அடுத்த முறையும் மத்தியில் ஆட்சியமைக்கும்’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது, முத்தலாக் நடைமுறையை ரத்து செய்தது, வக்ஃப் திருத்தச் சட்டம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா என துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வலுவான ஆட்சியை பிரதமா் மோடி வழங்கி வருகிறாா்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய அரசு முழு அளவில் ஊழலில் ஈடுபட்டு வந்ததோடு, நாடு முழுவதும் எதிா்மறை உணா்வு பரவியிருந்தது. ஆனால், 2014-க்குப் பிறகு மக்களின் எண்ணமும், உணா்வும் மாறிவிட்டன. ‘மோடி இருந்தால் இது சாத்தியமே’ என்று மக்கள் பெருமையுடன் கூறுகின்றனா்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.