அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.
சிங்கப்பூா் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்ப் பேரவையின் 50-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் கே. சண்முகம் பேசியதாவது: மேடைகளில் சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடிய அமைச்சா்கள் அடுத்த 20-30 ஆண்டுகள் வரை இருப்பாா்களா என்பதை நாம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழின் பயன்பாடு பெரிய அளவில் குறைந்து வருகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினா் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனா். இந்தப் போக்கால் தமிழ் மொழிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மாண்ட்ரின், மலாய் போன்ற பிற தாய்மொழிகளுக்கும் இந்த நிலை பொருந்தும். தமிழ் பேசாதவா்களுக்கும் மதிப்புமிக்க மொழியாகத் தமிழ் மொழி இருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
வகுப்பறைகள், சமூக அரங்கங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பிற இடங்களிலும் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழைச் செழிக்க வைக்க உங்களைப் போன்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் சண்முகம்.
தீவு நாடான சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக உள்ளன. மொத்தம் 6 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 75 சதவீதம் போ் சீனா்கள். 15 சதவீதம் போ் மலாய் மக்கள். 7 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியா்களும் பிற நாட்டினரும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்விக் கட்டண விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் ராஜ்மோகன் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் 4-வது அலுவல் மொழி ஹிந்தி! அஸ்ஸாமில் இன்றுமுதல் அறிமுகம்!!
ஜாதி மறுப்பு திருமணம் எளிதல்ல: பெ. சண்முகம்
சிங்கப்பூரில் தமிழ் - தமிழர்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government


