அரசியலமைப்பை பலவீனப்படுத்தியது யார்? காங்கிரஸை மறைமுகமாகப் பேசிய பிரதமர் மோடி
அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி கூறியது பற்றி..
பிரதமர் மோடி - file photo
இந்திய அரசியலமைப்புச் சட்டம், நான் உள்பட கோடிக்கணக்கான குடிமக்களின் வாழ்வோடு பிரிக்கமுடியாத வகையில் இணைந்துள்ளது, ஆனால் ஒரு கட்சி மட்டும் தொடர்ந்து அதைத் தவறாகப் பயன்படுத்தியதாகப் பிரதமர் மோடி கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது அரசியலமைப்புச் சட்டத்தைப் பலவீனப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைக்க, 356-வது பிரிவைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தியது ஒரு கவலைக்குரிய அத்தியாயம்.
அவசரநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் ஆகின்றன, அந்தத் திருத்தம் நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைக் குறைத்ததுடன், நிறுவனங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையை அடிப்படையிலேயே மாற்றியமைத்தது.
அதிகாரப் பசி கொண்ட, அரசியலமைப்புக்கு எதிரான தலைமை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள, இளைஞர்கள் 38-வது மற்றும் 39-வது அரசியலமைப்புத் திருத்தங்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.
பல்வேறு மதங்கள், மொழிகள், பழக்க வழக்கங்கள் மற்றும் சிந்தனைப் பள்ளிகளைக் கொண்ட பாரதம் போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு, அரசியலமைப்பு என்பது நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களின் எல்லைகளைத் தாண்டி, மக்களின் அன்றாட வாழ்விலும் எதிரொலிப்பது மிக முக்கியம்.
இதன் காரணமாகவே, ஒரு தசாப்தத்திற்கு முன்பு, ஆட்சியிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நவம்பர் 26-ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது.
என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்திய அரசியலமைப்பு என்பது நமது வாழ்வின் பயணத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

