தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

படம் |AP

Updated On :

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான டிராவிஸ் ஹெட் (0 ரன்), அபிஷேக் சர்மா (8 ரன்கள்), இஷான் கிஷன் (1 ரன்), நிதீஷ் ரெட்டி (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தவறாக கணித்துவிட்டோம்

மும்பைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

டேனியல் வெட்டோரி

டேனியல் வெட்டோரி - படம் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். போட்டிக்கான ஆடுகளம் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. இந்த ஆடுகளத்தில் 250 - 280 ரன்கள் குவிக்க முடியும் என நினைத்தோம். ஆனால், ஆடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் இருந்தது.

முதல் இரண்டு ஓவர்களை கடந்த பிறகு, இந்த ஆடுகளத்தில் 250 - 260 ரன்கள் குவிக்க முடியாது என்பதை உணர்ந்தோம். பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு அதிக ரன்கள் எடுக்க நினைத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதை உணர்ந்தவுடன், 180 ரன்கள் எடுக்கும் அளவுக்கு விளையாட வேண்டும் என நினைத்தோம். ஆனால், விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த ரன்களை குவிக்க முடியவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.