எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபடும் திமுக அமைச்சர்கள்: செல்லூர் கே.ராஜு குற்றச்சாட்டு

திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றச்சாட்டினார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:09 am IST


மதுரை: திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றச்சாட்டினார். 

மதுரை விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி கோரி ஏற்கனவே மனு அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்லூர் கே.ராஜு கூறுகையில், "மாநாட்டிற்க்கான காவல்துறை அனுமதி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேசினோம், மாநாடு நடைபெறும் இடத்தினை காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாக எஸ்.பி கூறினார். மாநாட்டுக்கு விரைவில் காவல்துறை அனுமதி அளிக்கும் என எஸ்.பி கூறியுள்ளார். 

மாநாட்டினால் எந்தவொரு போக்குவரத்து நெரிசலும் வராத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுமார் 25 ஆயிரம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

அதிமுக மாநாடு தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் மதுரையில் 31 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார். 

பின்னர், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே அமலாக்கத்துறை சோதனை, திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர் என செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.