எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வலங்கைமான் அருகே கடனை கேட்டு மிரட்டல்: இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

வலங்கைமான் அருகே புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி கடனை கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:13 am IST

திருவாரூர்: வலங்கைமான் அருகே புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி கடனை கேட்டு மிரட்டல் விடுத்ததால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூரைச் சேர்ந்த ஸ்டாலின் இளைய மகன் ராஜேஷ் (27). கும்பகோணத்தில் உள்ள நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ராஜேஷ் வேலை பார்த்து வரந்தார். 

இந்நிலையில், ராஜேஷ் ஆன்லைனில் கடன் செயலி மூலம், பலமுறை கடன் பெற்று திருப்பி செலுத்தி வந்துள்ளார்.

இதே போன்று இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க் மூலம் கடன் செயலி வாயிலாக கடன் பெற்று, திருப்பி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடன் வழங்கிய நிறுவனம் ராஜேஷிடம் பணம் கேட்டு வாட்ஸ்ஆப் வாயிலாக குறுஞ்செய்தி மற்றும் விடியோ வாயிலாக மிரட்டி உள்ளனர்.

தொடர்ந்து அந்நிறுவனம் ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அதை அவருக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளனர். இதில் மன அழுத்தத்திற்கு ஆளான ராஜேஷ், பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கி நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ராஜேஷ் செல்பேசியை கைப்பற்றி விசாரித்தில், அவரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து மிரட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் கடன் செயலி மூலம் கடன் பெற்று அதனால் ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.