ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

உளுந்தூர்பேட்டையில் இன்று விசிக மது ஒழிப்பு மாநாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு புதன்கிழமை (அக். 2) நடைபெறவுள்ளது.

News image

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்.

Updated On :2 அக்டோபர் 2024, 3:16 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு புதன்கிழமை (அக். 2) நடைபெறவுள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகிக்கிறார்.

மாநாட்டில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய மகளிரணிச் செயலர் ஆனி ராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி, மதிமுக துணை பொதுச் செயலர் மருத்துவர் ரொஹையா ஷேக் முகமது மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குரிய ஏற்பாடுகளை விசிக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டுப் பகுதியில் சுமார் 50,000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் தலைமையில், எஸ்.பி.க்கள் ரஜத் ஆர்.சதுர்வேதி (கள்ளக்குறிச்சி), வி.வி.சாய் பிரனீத் (செங்கல்பட்டு) மேற்பார்வையில், 11 ஏடிஎஸ்பிக்கள், 20 டிஎஸ்பிக்கள், 50 காவல் ஆய்வாளர்கள், 150 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 1,200 போலீஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.