பங்குச் சந்தை 2வது நாளாக உயர்வுடன் நிறைவு!
இந்திய பங்குச் சந்தை வணிகம் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு பெற்றது குறித்து...

கோப்புப் படம்
இந்திய பங்குச் சந்தை வணிகம் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 25,884 புள்ளிகளுடனும் வணிகம் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை வணிகம் சென்செக்ஸ் இன்று காலை 84,301 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 84,551 புள்ளிகள் வரை உயர்ந்தது. எனினும் பிற்பகலில் தொடர்ந்து குறைந்து அதிகபட்சமாக 83,550 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 390 புள்ளிகள் உயர்ந்து 84,328 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.46% உயர்வாகும்.
தேசிய பங்குச் சந்தை வணிகம் நிஃப்டி இன்று காலை 25,873 புள்ளிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து அதிகபட்சமாக 25,974 புள்ளிகள் வரை உயர்ந்தது. பிற்பாதியில் ஏற்ற இறக்கங்களுடன் வணிகம் இருந்த நிலையில் வணிக நேர முடிவில் 65.25 புள்ளிகள் உயர்ந்து 25,884 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக எச்சிஎல் டெக் பங்குகள் 6.43% உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக டிசிஎஸ் 4.89%, இன்ஃபோசிஸ் 4.70%, டெக் மஹிந்திரா 2.98%, டாடா ஸ்டீல் 2.67%, எச்டிஎஃப்சி வங்கி 1.87%, ரிலையன்ஸ் 1.63%, சன் பார்மா 0.78% உயர்ந்திருந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் பிஎஸ்இ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், ஜியோ ஃபைனான்சியல், சிப்லா, கோல் இந்தியா, எஸ்பிஐ லைஃப், சன் பார்மா, என்டிபிசி, மேக்ஸ் ஹெல்த்கேர், கோட்டாக் வங்கி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருவதால், தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்திய பங்குச் சந்தை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Stock market ends higher for the second consecutive day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


