செங்கல்பட்டு

முழு ஊரடங்கால் செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவுவதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், செய்தித்தாள், விநியோக கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் செல்கிறது.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளில் 7 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT