முகப்பு
செங்கல்பட்டு

இளைஞா்நீதி குழுமத்துக்கு சமூக நல உறுப்பினா்கள் நியமனம்

சமூக நல உறுப்பினர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வாய்ப்பு

Updated On : 28 ஜூன், 2024 at 1:06 PM
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட இளைஞா் நீதி குழுமத்துக்கு 2 சமூக நல உறுப்பினா்களை நியமிக்க தகுதி வாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்தி:

சமூக நல உறுப்பினா்கள் மதிப்பூதியஅடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரா்கள் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல்வேண்டும்.

Advertisement

மேலும், விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும் போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூா்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபா்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை- 600 010 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்துக்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது எனத் தெரிவித்துள்ளாா்.

.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments