சென்னையில் காவல்துறை ரோந்து வாகனத்தில் இருந்த பை திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே. நகர் பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் காவலர் ஒருவர் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.
அந்த பையில் காவலரின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேருந்து பயண அட்டை மற்றும் ரூ. 4,000 பணம் வைத்திருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் ரோந்து வாகனத்தில் இருந்த காவலரின் பையே திருடுபோன சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.