முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

17.2.1976: சென்னையில் குடிநீர் பிரச்னை தீரும்: பிரதமர் அறிவிப்பு

பிரதமர் இந்திரா காந்தியின் உரை...

Updated On : 17 பிப்ரவரி 2026, 4:00 am IST
17.2.1976
பகிர்:

சென்னை, பிப். 15 - "தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களும் 500 கோடி கன அடி தண்ணீர் (மொத்தம் 1500 கோடி கன அடி) ஒப்புக்கொண்டுள்ளன" என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை சென்னை கரையில் நடைபெற்ற பிரும்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று அறிவித்தார்.

”மூன்று மாநிலங்களும் சேர்ந்து மொத்தம் 1500 கோடி கன அடி நீர் தரும். இதன் மூலம் சென்னை நகரின் குடிதண்ணீர் தட்டுப்பாடு தீரும்” என்று பிரதமர் அறிவித்தபோது கூடி இருந்த லட்சக்கணக்கான மக்கள் பலமாகக் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ...

... நிர்வாக சீர்குலைவு

Advertisement

Advertisement

ஆனாக் இங்கு தமிழகத்தில் ஒரு திட்டமிட்ட முயற்சி கணக்கிட்டுச் செய்யப்பட்டது. திறமை, நேர்மையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் தங்களுக்கு வேண்டியவர்களை நிர்வாகத்தில் நியமிப்பது ஊடுருவல் செய்வது ஆகியவற்றை செய்தார்கள். நிர்வாகத்தைச் சீர்குலைக்கக் கட்சி ஊடுருவல்கள் நடைபெற்றிருக்கின்றன. கட்சி சாயம் உள்ளவர்களை, தங்கள் கட்சி ஆட்களை பதவிகளின் முக்கிய கேந்திரங்களில் நியமித்தார்கள். செய்யக் கூடாத இது போன்ற செயல்களை திட்டமிட்டு செய்தார்கள்.

தங்களுடைய ஆட்சிக் கால சாதனைப் பட்டியல் பற்றி தி.மு.க.வினர் பிரமாதமாக விளம்பரப்படுத்தினார்கள்: பிரசாரம் செய்தார்கள், ஆனால் அந்த சாதனைப் பட்டியல் விளம்பரம் அர்த்தமற்றது என்பதை நடைபெற்றுள்ள காரியங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டு தமிழகம் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இணைந்த காங்கிரஸின் தலைவர் கருப்பையா மூப்பனார் என அறிவிப்பு

சென்னை, பிப். 15 - தமிழ் நாட்டில் இணைந்த இரு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தஞ்சாவூர் ஜி. கருப்பையா மூப்பனார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இரு காங்கிரஸ் கட்சிகள் இன்று சென்னையில் நடந்த மகாநாட்டில் முறைப்படி இணைந்தன.

கடற்கரையில் இன்று நடந்த இணைப்பு மாநாட்டு முடிவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பரூவா கருப்பையா மூப்பனார் நியமனத்தை அறிவித்தார். உடனே கூடி இருந்த மக்கள் "காமராஜ் புகழ் வாழ்க; இந்திரா வாழ்க; மூப்பனார் வாழ்க" என்று வாழ்த்தொலி எழுப்பினர்.

மறைந்த காமராஜின் நெருங்கிய நண்பரான மூப்பனார் தஞ்சை மாவட்டத்தில் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். 49 வயதான அவர் தஞ்சை மாவட்ட (பழைய) காங்கிரஸ் தலைவராக ஏறத்தாழ 15 ஆண்டுகளாகவே இருந்து வருகிறார்.

காங்கிரசின் இதுவரை புது தலைவராக இருந்த கே.எஸ்.ராமசாமியும், இணைப்பு ஆதரவு பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த பி.மகாதேவன் பிள்ளையும் துணைத் தலைவர்களாக இருப்பார்கள் என்றும் பலத்த கரகோஷத்திற்கிடையே பரூவா அறிவித்தார். இதர நிர்வாகிகளின் பெயர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

சென்னை கல்லூரிகள் அபிவிருத்திக்கு ரூ. 1 கோடி திட்டம்

திருச்சி, பிப். 16 - சென்னை நகரில் உள்ள கல்லூரிகளின் அபிவிருத்திக்கென ரூ.1 கோடி செலவு பிடிக்கும் திட்டம் இறுதியாக்கப்பட்டு பல்கலைக்கழக மான்யக் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா கூறினார்.

திருச்சியில் நமது நிருபரிடம் இத்தகவலை அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் சென்னையில் உள்ள 15 கல்லூரிகளின் அபிவிருத்திக்கானதாகும்.

சென்னை நகர எல்லைக்குள் அமைந்த 15 கல்லூரிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் கல்லூர கள் இடையிலான திட்டம் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ரூ .1 கோடியே 26 லட்சமாகும். இதில் பல்கலைக்கழக மான்யக் கமிஷனின் பங்கு ரூ. 70 லட்சமாகும் என்று துணைவேந்தர் கூறினார்.

summary

17.2.1976: Drinking water problem in Chennai will be solved: Prime Minister announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.