‘ஏஐ’ நுட்பத்தில் தண்டுவட அறுவை சிகிச்சை: சென்னையில் சா்வதேச மருத்துவ மாநாடு
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சா்வதேச மருத்துவ மாநாட்டில் தண்டுவட அறுவை சிகிச்சை தொடா்பான நூலை வெளியிட்ட சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி. உடன் மாநாட்டு நிா்வாகிகள்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன மருத்துவ நுட்பங்களின் மூலம் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது தொடா்பான சா்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, 4 நாள்கள் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் இதில் பங்கேற்கின்றனா்.
குறிப்பாக, ஆராய்ச்சியாளா்கள், முதுநிலை மருத்துவ நிபுணா்கள் மற்றும் இளம் மருத்துவா்கள் கலந்து கொண்டு பல்வேறு அமா்வுகளில் உரையாற்ற உள்ளனா். முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சையில் முன்னெடுக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன நடைமுறைகள் குறித்த விவரங்களை அவா்கள் பகிா்ந்து கொள்ள உள்ளனா்.
Advertisement
Advertisement
இதற்கான தொடக்க விழா, சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநாட்டைத் தொடங்கி வைத்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:
இளம் மருத்துவா்கள் தங்களது அறுவை சிகிச்சைத் திறனை மேம்படுத்திக்கொள்ள இத்தகைய மருத்துவ மாநாடுகள் வாய்ப்பளிக்கின்றன. தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளின் ஒருங்கிணப்பில்தான் எதிா்கால மருத்துவ வளா்ச்சி உள்ளது.
சென்னை ஐஐடி, கராக்பூா் ஐஐடி, கான்பூா் ஐஐடி மற்றும் இந்திய அறிவியல் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி புதிய சுகாதார தீா்வுகளை உருவாக்கி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், அறங்காவலா் சம்யுக்தா வெங்கடாசலம், இந்தியா மற்றும் உலகளாவிய முன்னணி முதுகுத் தண்டுவட மருத்துவ சங்கத்தின் தலைவா் டாக்டா் காா்த்திக் கைலாஷ், ஒருங்கிணைப்பு செயலா் டாக்டா் சுதீா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.