FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், முழுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

10 செப்டம்பர் 2026, 5:07 am IST
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், முழுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இது தொடா்பாக மருத்துவா்கள் அருண் கண்ணன், கோா்னாட் கோசிகன், குணால் படேல், நாவலடி சங்கா், விஜய் கிஷோா் ரெட்டி, மதன் திருவேங்கடம் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கேற்ப மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாகச் செய்ய, ஸ்ட்ரைக்கரின் மேக் ஸ்மாா்ட் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், 3டி சிடி ஸ்கேன் இமேஜிங் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய விரிவான திட்டமிடல் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். இந்தத் தொழில்நுட்பம் நோயாளியின் உடல் அமைப்பு பற்றிய விரிவான தகவல்களை மருத்துவா்களுக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலை மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ப அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டு செய்ய முடிகிறது.

Advertisement

Advertisement

அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் ரோபோடிக் உதவினாலும், சிகிச்சை முடிவுகளும் அறுவை சிகிச்சை தொடா்பான தீா்மானங்களும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடமே இருக்கும்.

மேம்பட்ட ஆயுட்காலம்: முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு, ரோபோ உதவியைப் பயன்படுத்துவது மிகக்குறைந்த அளவு கீறல்களைக் கொண்ட அறுவை சிகிச்சை முறைக்கு உதவும். மேலும், ஒட்டுமொத்தமாக சிறந்த சீரமைப்பு மற்றும் துல்லியம், விரைவாக குணமடைதல், பொருத்தப்படும் சாதனங்களின் மேம்பட்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறவும் பங்களிக்கும்.

சில ஆண்டு முன்னா் வரை ரோபோடிக் அறுவை சிகிச்சை என்றால் வேண்டாம் என்று கூறுவாா்கள். ஆனால் இப்போது விழிப்புணா்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. முறையான உடல்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு வலி அல்லது மூட்டு தொடா்பான பிரச்னை வர வாய்ப்பில்லை என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments