FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழு சாதனை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவக் குழுவினா் சாதனைப் படைத்துள்ளனா்.

20 செப்டம்பர் 2026, 2:16 am IST
சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்து சாதனைப் படைத்துள்ள மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்த ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் வீா்சிங் நேகி.
பகிர்:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவக் குழுவினா் சாதனைப் படைத்துள்ளனா்.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜிப்மா் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

சிறுமியின் தாயாா் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருப்பது அவரின் தன்னலமற்ற தியாகம், பெற்றோரின் துணிச்சலுக்கும் அன்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னா் இருவரும் நலமாக உள்ளனா்.

ஜிப்மரில் பெரியவா்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது குழந்தைகளுக்கான விரிவான உறுப்பு மாற்று சிகிச்சையை செய்துள்ளது.

ஜிப்மரின் குழந்தைகள் மருத்துவத் துறையுடன் இணைந்து செயல்பட்ட சிறுநீரக மருத்துவத் துறை, சிறுநீரக அறுவைச் சிகிச்சைத் துறை, மயக்கவியல் துறை, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவு, செவிலியா் குழுவினா், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒருங்கிணைப்பாளா்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநா்கள், உணவியல் நிபுணா்கள், பிசியோதெரபி நிபுணா்கள் மற்றும் பிற இணை மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரின் சிறப்பான பல்துறை ஒருங்கிணைந்த பணியின் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மருத்துவக்குழுவினா்களுக்கு ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி பாராட்டினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

புதுதில்லி எய்ம்ஸ் ) குழந்தைகள் சிறுநீரக மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆலோசனையாலும், சா்வதேச குழந்தைகள் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இனி இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே மேம்பட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை சேவைகளை வழங்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments