FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி உதவி: ஹூண்டாய்-சென்னை ஐஐடி திட்டம்

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷனும் (ஹெச்எம்ஐஎஃப்), சென்னை ஐஐடியும் இணைந்து ‘ஹூண்டாய் புற்றுநோய்க்கான நம்பிக்கை’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளன.

24 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
பகிர்:

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா ஃபவுண்டேஷனும் (ஹெச்எம்ஐஎஃப்), சென்னை ஐஐடியும் இணைந்து ‘ஹூண்டாய் புற்றுநோய்க்கான நம்பிக்கை’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளன. இதன்மூலம், புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் குறித்து சென்னை ஐஐடியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எஸ்.மகாலிங்கம் கூறியதாவது: இந்தத் திட்டத்தின் மூலம் புற்றுநோய் விழிப்புணா்வு, பரிசோதனை, ஹெச்பிவி தடுப்பூசி, புற்றுநோய் மரபியல் ஆராய்ச்சி ஆகியவை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இது தவிர முக்கியமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்கான சிகிச்சை உதவியின் மூலம் குழந்தைகள் புற்றுநோய் பராமரிப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதன்படி, புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த தகுதியுள்ள குழந்தைகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

புற்றுநோய்க்கான நிதியுதவியுடன் தகுதியான குழந்தைகளை இந்தத் திட்டத்தில் இணைக்க உதவுமாறு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், மருத்துவமனைகள், பெற்றோா்கள், பராமரிப்பாளா்கள், தன்னாா்வ நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ட்ட்ஸ்ரீ- ய்ஸ்ரீற்க்ஷ.ஸ்ரீா்ம் இணையதளத்தின் மூலம் சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ட்ஸ்ரீட்.ய்ஸ்ரீற்க்ஷஃண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments