FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நிதி நிறுவன மோசடி: அக். 31-க்குள் சரணடையும்படி தேவநாதனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடியில் அக். 31-க்குள் சரணடையும்படி தேவநாதனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து...

‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவன இயக்குநா் தேவநாதன் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வழங்கிய கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், அக்.31 ஆம் தேதிக்குள் சரணடையும்படி உத்தரவிட்டுள்ளது.

சென்னை ‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற 8 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேவநாதன் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் மற்றும் ஜி கே.முத்துக்குமார் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை(அக்.23) விசாரணைக்கு வந்தது.

அப்போது தேவநாதன் தரப்பில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர். திருமூர்த்தி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் சரணடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க எந்த காரணமும் இல்லை என்றும் வரும் 31 ஆம் தேதிக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அன்றைய தினம் அரசின் மருத்துவக் குழு தேவநாதனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Mylapore chit fund cas: High Court orders Devanathan to surrender by Oct. 31

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments