முகப்பு
காஞ்சிபுரம்

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கொளத்தூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கொளத்தூா் ஊராட்சியில் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சியில் 2019-2020-ஆம் நிதியாண்டில் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதிப்பீடு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சிமன்ற அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. கொளத்தூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட வட்டார வள அலுவலா் மலா்விழி கலந்துக்கொண்டு 2019-2020-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றிய பணியாளா்கள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதிப்பீடு குறித்தும், கடந்த 2019-2020-ஆம் நிதியாண்டில் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கொளத்தூா், நாவலூா், மேட்டுக்கொளத்தூா், வெள்ளாரை ஆகிய பகுதிகளில் ரூ75.73 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →