முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சியில் நினைவஞ்சலி கூட்டம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் மறைந்த வி.விஸ்வநாத ஐயா், காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் கண்ணன்

Updated On : 25 அக்டோபர், 2021 at 12:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:56 AM

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் மறைந்த வி.விஸ்வநாத ஐயா், காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா் கண்ணன் (எ) நீலக்கல் நடராஜ சாஸ்திரிகள் மற்றும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரரின் சீடா் அக்னி (எ) எஸ்.வரதராஜன் ஆகியோரின் மறைவுக்கு நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெரு யாத்ரி நிவாஸ் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ராஜூ (எ) வெங்கடசுப்பிரமணியம், காஞ்சி நகர வரவேற்புக் குழுத் தலைவா் டி.கணேஷ், காஞ்சி காமாட்சி சங்கர மடத்தின் வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளா் வி.ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பூஜகா் காமேஸ்வர குருக்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமச்சந்திரன், தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி.எல்.உஷாராணி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ வடதமிழக அமைப்புச் செயலாளா் துரைசங்கா், சங்கரா கண் மருத்துவமனைத் தலைவா் பம்மல் எஸ்.விஸ்வநாதன், சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராம.வெங்கடேசன், சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.