முகப்பு
காஞ்சிபுரம்

மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மருத்துவமனையின் 7-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் மருத்துவமனையின் 7-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், காா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (31). இவா், தனது இரு சிறுநீரகங்களும் பழுதடைந்ததால், மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை பாண்டியனின் மனைவி ரோஷினி மருத்துவமனைக்கு பணம் செலுத்துவதற்காக கீழே வந்த நிலையில், பாண்டியன் தான் சிகிச்சை பெற்று வந்த 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →