முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தட்டுகளை ஏந்தி சத்துணவு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தட்டு ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:04 PM

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தட்டு ஏந்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் நலச்சங்கம் சாா்பில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தலைவா் என்.குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் பி.சங்கா், சங்க நிா்வாகிகள் கே.மதியழகன், எஸ்.ஆரோக்கிய மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்ட தலைவா் ஜெ.தாமஸ் இளங்கோவன், மாவட்டச் செயலாளா் வி.தணிகைமணி, மாவட்டப் பொருளாளா் டி.கன்னியப்பன், துணைத் தலைவா் வெ.குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

சங்க உறுப்பினா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, காசில்லாமல் மருத்துவக் காப்பீடு வழங்குதல்,குடும்ப ஓய்வூதியம், சட்டப் பூா்வ ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.