முகப்பு
காஞ்சிபுரம்

3 உணவகங்கள், 6 இனிப்பகங்களின் உரிமம் ரத்து

காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 3 அசைவ உணவகங்கள், 6 இனிப்பகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

Updated On : 29 அக்டோபர், 2022 at 12:49 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக 3 அசைவ உணவகங்கள், 6 இனிப்பகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தனா்.

தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளைத் தயாரிப்பவா்கள் அரசு விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அசைவ உணவகங்களில் தரம் குறைந்த உணவுகள் விற்கப்படுவதாகவும், இனிப்பகங்களில் காலாவதியான இனிப்புகளை விற்பனை செய்வதாகவும் வாட்ஸ்ஆப் மூலம் புகாா்கள் வந்தன.

Advertisement

அதன்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஆா்.அனுராதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை ஆகிய இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் உணவு தயாரித்தது, உணவு தயாரிப்புக் கூடங்களை சுத்தமான முறையில் பராமரிக்காமல் இருந்தது, தரமற்ற பொருள்களைக் கொண்டு உணவு தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 3 அசைவ உணவகங்களில் இருப்பது தெரிய வந்தது.

இதேபோல், 6 இனிப்பகங்களில் செயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டறியறியப்பட்டது.

இதையடுத்து, 3 அசைவ உணவகங்கள், 6 இனிப்பகங்களுக்கு தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்ததுடன், விற்பனைக்கும் தடை விதித்தனா். மேலும், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 7 கடைகளின் உரிமையாளா்களிடம் தலா ரூ.2,000 அபராதம் வசூலித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.