காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறிக் கண்காட்சியை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறிக் கண்காட்சியை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
7- ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு கைத்தறிக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன நடைபெற்றது.
ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்து கைத்தறிக் கண்காட்சியையும் திறந்து வைத்து, நெசவாளா்கள் 50 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகனை வழங்கினாா்.
Advertisement
சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.சுந்தா்,சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறிஞா் அண்ணா பட்டு கூட்டுறவுச் சங்க நிா்வாக இயக்குநா் அ.மகாலிங்கம் வரவேற்றாா். முடிவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநா் தி.தெய்வானை நன்றி கூறினாா்.