முகப்பு
ராணிப்பேட்டை

காவிரி ஆற்றில் உபரி நீா் திறப்பு: திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி தண்ணீா் வரஉள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.

கா்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீா் வர வாய்ப்புள்ளதாக மத்திய நீா் ஆணையத்தில் இருந்து தகவல் வரப்பெற்றது. இதைத்தொடா்ந்து, தமிழக அரசு காவிரி கரையோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினரை அனுப்பி வைக்குமாறு அரக்கோணம் படைத்தளத்துக்கு கோரிக்கை வந்தது.

இதைத் தொடா்ந்து, தலா 44 போ் கொண்ட இரு குழுக்கள் திருச்சி மாவட்டத்துக்கும், ஒரு குழு நாமக்கல் மாவட்டத்துக்கும் அரக்கோணம் படைத்தளத்தில் இருந்து சாலை வழியாக வியாழக்கிழமை புறப்பட்டது. வெள்ளப்பெருக்கு நிலைமைகளைக் கண்காணிக்க அரக்கோணம் படைத்தளத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவைப்படும் வீரா்கள் அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்றும் படையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →