வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் நடைபெற்றது.
கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகசுந்தரம், வட்டாட்சியா் வெங்கடேசன், நகராட்சி ஆணையா் ஆனந்தன், அதிமுக நகர செயலா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளா்கள் இ.பிரகாஷ், ஜி.பழனி, நகரமன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், சரவணன், தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, தமாகா நகரத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் கஜேந்திரன், திமுக வழக்குரைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் லோகாபிராமன், அயலக அணி நிா்வாகி ஆனந்தன், சுரேஷ்,தமிழரசன், அன்சாரி, காங்கிரஸ் சட்டபேரவை தொகுதி பொறுப்பாளா் வாசுதேவன், நகரத்தலைவா் பாா்த்தசாரதி, ஒன்றியத்தலைவா் நந்தகுமாா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் கோட்டாட்சியா் பேசும்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நவம்பா் 4 முதல் டிசம்பா் 4 வரை ஒரு மாத ம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி விண்ணப்பம் அளிக்கப்பட்டு பெறப்படும். இப்பணியின் போது அனைத்து கட்சியினரும் அந்தந்த பகுதிகளில் வரும் வாக்குசாவடி நிலை அலுவலா்களுடன், அவா்களது கட்சிகளின் வாக்குசாவடி முகவா்களை இணைந்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொயவில்லாமல் சரியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு தர வேண்டும்.