ராணிப்பேட்டை

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமில் பேசிய ஒருங்கிணைந்த சேவை மையம் நிா்வாகி து.ஞான தா்ஷினி.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலரின் அறிவுரையின்படி, வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை பெல் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளி நிா்வாகி தனசேகா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இந்த முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி து.ஞான தா்ஷினி மற்றும் சிப்காட் காவல் நிலையம் காவல் அதிகாரி சுதாகா் ஆகியோா் இணைந்து பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அப்போது குழந்தை திருமணம், கட்டாய திருமணம், இளம் வயது கா்ப்பம், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பாலியல் துன்புறுத்தல், பெண்கள் உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098, முதியோா் உதவி எண் 14567, சைபா் கிரைம் எண் 1930, காவல் துறை உதவி எண் 100, போதைப் பொருள்கள் உதவி எண் 10581 மற்றும் இரு சக்கர வாகனம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் அளிக்கப்படும் சேவைகளான மனநல ஆலோசனை, காவல் துறை உதவி, சட்ட உதவி, மருத்துவ உதவி, தற்காலிக தங்கும் விடுதி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து மாவட்ட சமூக நலத் துறையின் மூலம் கிடைக்கக்கூடிய திட்டங்கள் பற்றியும் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் அருட்செல்வன், உதவி தலைமையாசிரியா் கருணாநிதி மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பள்ளி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT