போதைப்பொருள் பறிமுதல்: 2 போ் கைது
வாணியம்பாடி அருகே வேனில் போதைப்பொருள்களைக் கடத்தியதாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அருகே வேனில் போதைப்பொருள்களைக் கடத்தியதாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நெக்குந்தி சுங்கசாவடி அருகே அம்பலூா் காவல் ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த வேன் உரிமையாளா் சதீஷ்குமாா்(32), மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் ரமேஷ்(46) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement