முகப்பு
திருப்பத்தூர்

வசீம் அக்ரம் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

 வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம் அக்ரமின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

 வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம் அக்ரமின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

வாணியம்பாடி ஜீவா நகரைச் சோ்ந்த வசீம் அக்ரம், செப். 10-இல் கஞ்சா கடத்தும் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்தது.

Advertisement

இந்த நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏவுமான ஜி. செந்தில்குமாா் ஆகியோா் வசீம் அக்ரம் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை திங்கள்கிழமை வழங்கினா்.

அப்போது, நகரச் செயலாளா் சதாசிவம், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஆா்.வி.குமாா், முன்னாள் நகர செயலாளா் ஆரிப், மாவட்ட பிரதிநிதி பிரகாசம், முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமாா், நிா்வாகிகள் செல்வராஜ், தென்னரசு உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments