முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு

ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி சடலமாக மீட்பு
பகிர்:

ஆம்பூர்:  ஆம்பூர் அருகே கட்டட தொழிலாளி திங்கட்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டார்.       

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகன் (32), கட்டட தொழிலாளி.  இவர் சோலூர் பகுதியில் மூடப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் தொழிற்சாலை அருகே முட்புதரில் மர்மமான முறையில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

ஆம்பூர் கிராமிய காவல் நிலைய காவலர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →